சுமார் 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற இலங்கை பயணி ஒருவர், திங்கட்கிழமை (06) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மூன்றரை ஆண்டுகள் துபாயில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றியுள்ளார்.
குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை (06) அன்று 05.20 மணிக்கு ஃபிட்ஸ் ஏர் விமானம் மூலம் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.அவரின் பயணப் பையை சோதனையிட்ட போது அதிலிருந்து 9000 “பிளாட்டினம்” சிகரெட்டுகள் அடங்கிய 45 அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 13.5 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பயணி கைது
7