காசா போரை முடிவுக்குக் கொண்டு வந்தால் மாத்திரமே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நோபல் பரிசை வெல்ல முடியும் என, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.உலக நாடுகள் இடையே 7 போர்களை நிறுத்தியதுடன், இந்தியா- பாக்கிஸ்தான் மோதலையும் தானே தீர்த்து வைத்ததாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றார்.அதுமட்டுமின்றி உலகின் 7 போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு தந்தே ஆக வேண்டும் என, ட்ரம்ப் தனது ஆசையை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.இந்த நிலையிலேயே, காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல முடியும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.அத்துடன், இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு மட்டுமே உள்ளது.தற்போதைய சூழ்நிலையில் போரை நிறுத்துவதற்கு ஏதேனும் ஒன்றைச் செய்யக்கூடிய ஒரே ஒரு நபர், ட்ரம்ப் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.காசா மோதலை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கும் வகையில் இஸ்ரேலுக்கு நாம் ஆயுதங்களை வழங்குவதில்லை என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.