கிளிநொச்சி பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றில் 3ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் ஆசிரியை ஒருவரால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.தன்னுடைய மகனின் ஒப்பமிடலில் தவறுதலாக மாறி ஒப்பமிட்ட 3ம் ஆண்டு மாணவனின் காதை குறித்த ஆரம்பப்பிரிவு ஆசிரியை காயப்படுத்தியுள்ளார். நீதி கேட்டு முறைப்பாடு செய்யச் சென்ற பெற்றோரை பாடசாலை நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளதுடன் கூட்டமாக சேர்ந்து பெற்றோரை மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் குறித்து உரிய விசாரணை நடாத்தப்படவேண்டும் சாதாரண விடயங்களுக்கு இப்படியான தண்டணை தவறானது என கடும் விசனங்களும் எழுந்துள்ளது.