Monday, May 5, 2025
Homeஇலங்கைகுப்பை மேடாக காட்சியளிக்கும் கட்டைக்காடு-பிரதேச சபை,சுகாதார அதிகாரிகள் வருவதில்லையென மக்கள் குற்றச்சாட்டு

குப்பை மேடாக காட்சியளிக்கும் கட்டைக்காடு-பிரதேச சபை,சுகாதார அதிகாரிகள் வருவதில்லையென மக்கள் குற்றச்சாட்டு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டின் சில பகுதிகள் குப்பை மேடுகளாக காட்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு அருகில் ஒரு சிலர் குப்பைகளை கொட்டுவதால் தற்போது அப்பகுதிகள் சில பாரிய குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன.மீன் கழிவுகள் உட்பட பல்வேறு கழிவுகளை வீட்டுக்கருகில் வீசுவதால் துர்நாற்றம் வீசி குழந்தைகளுக்கு நோய் பரவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது கட்டைக்காட்டின் குப்பை மேடுகள் காணப்படுவதற்கு அருகில் வசிப்பவர்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

கிராம சேகவரோ,பிரதேச சபையோ,சுகாதார அதிகாரிகளோ வருகை தந்து அப்பகுதிகளை ஒரு போதும் பார்வையிடுவதில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.சுகாதார அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வந்து உரிய முறையில் பார்வையிட்டு சட்ட நடவடிக்கை மேற்கொண்டால் இவ்வாறான தவறுகள் இடம்பெறாது என்று அப்பகுதியில் சுகாதார முறைகளை பின்பற்றி வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குப்பை மேடாக காட்சியளிக்கும் கட்டைக்காடு-பிரதேச சபை,சுகாதார அதிகாரிகள் வருவதில்லையென மக்கள் குற்றச்சாட்டு

kmc 20250126 080757

இதையும் படியுங்கள்:  அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப கட்டமாக ‘Gov Pay’ என்ற திட்டம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!