கொழும்பு ஹோமாக பிரதேசத்தில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் ஆசிரியர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளதாகவும், இதனை தாங்க முடியாமல் குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த மாணவி பாடசாலை தவணை பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், ஆசிரியர்கள் தொடர்ந்து மாணவிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதுடன் ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அதிக மன அழுத்தத்திலிருந்த மாணவி வீட்டிற்குச் சென்று அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.அதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.