சீனாவின் மிகப்பெரிய ஹாட்பாட் சங்கிலியான ஹாய்டிலோ ஓட்டலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்ற இரு இளைஞர்கள் சூப் ஆர்டர் செய்தனர்.தனி அறை ஒன்றில் உணவருந்தும்போது அவர்கள் சூப் பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ ஆன்லைனில் வைரலாகப் பரவியது.விசாரணையில், அந்தச் சிறுவர்கள் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.இதுதொடர்பாக, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஹாய்டிலோ இழப்பீடு வழங்கியது.இதற்கிடையே, ஓட்டல் சார்பில் ஷாங்காய் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஷாங்காய் நீதிமன்றம், வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கியதால் உணவகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது. எனவே, இளைஞர்களின் பெற்றோர் உணவகத்திற்கு 2.71 கோடி ரூபாய் நஷட் ஈடு அளிக்கவேண்டும் என உத்தரவிட்டது.