இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள மக்கள் வளமான ஒரு எதிர்கால அரசையும் நவீன இலங்கை தேசத்தையும் கனவு கண்டு கொண்டிருக்கும் நேரத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது சிறப்பு வாய்ந்து என ஜனாதிபதி தெரிவித்தார்.கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெற்ற 77 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.77வது சுதந்திர தின விழா இன்று காலை ஜனாதிபதி தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் ஆரம்பமானது.
சுதந்திரக் கனவை ஒன்றாக நனவாக்க வேண்டும் – ஜனாதிபதி
By newsteam
0
75
Previous article
Next article
RELATED ARTICLES