யாழ்ப்பாணம், செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் 11 என்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அதற்கமைய, இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள், இன்றைய தினம் 21 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகள், தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவ, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.இதன்போது, 11 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், 9 என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.அதற்கமைய, இன்றைய தினத்துடன் மொத்தமாக 90 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.இதுவரையில் செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து 101 மனித என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்தநிலையில், நாளைய தினமும் அகழ்வுப்பணிகள் இடம்பெறும் என பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.இதேவேளை, சித்துபாத்தி மனிதப் புதைகுழி பகுதியில், சித்துபாத்தி இந்துமயான நிர்வாகத்தினர் 4 சிசிரீவி கெமராக்களை புதிதாக பொருத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 11 என்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு – மொத்தமாக 101 ஆக உயர்வு
RELATED ARTICLES