Home இந்தியா தந்தையின் உடலை இரு பாதியாக வெட்டி தனித்தனியே இறுதிச் சடங்கு செய்ய சகோதரர்கள் திட்டம்

தந்தையின் உடலை இரு பாதியாக வெட்டி தனித்தனியே இறுதிச் சடங்கு செய்ய சகோதரர்கள் திட்டம்

0
தந்தையின் உடலை இரு பாதியாக வெட்டி தனித்தனியே இறுதிச் சடங்கு செய்ய சகோதரர்கள் திட்டம்

மத்தியப் பிரதேசத்தில் தந்தையின் உடலை இரண்டாக வெட்டி தனித்தனியே இறுதிச்சடங்கை நடந்த மகன்கள் சண்டையிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.மத்திய பிரதேசத்தின் திகம்கர் மாவட்டம், லிதோரடால் கிராமத்தை சேர்ந்தவர் தயானி சிங் கோஷ் (84). இவர் தனது இளைய மகன் தேஷ்ராஜுடன் வசித்து வந்தார். மூத்த மகன் கிஷன் வெளியூரில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக தயானி சிங் நேற்று முன் தினம் ( ஞாயிற்றுக்கிழமை ) உயிரிழந்தார்.இறுதிச் சடங்குக்கு வெளியூரில் வசித்து வந்த அண்ணன் கிஷன் தம்பியின் வீட்டுக்கு வந்துள்ளார். மூத்த மகன் என்ற அடிப்படையில் தந்தையின் இறுதிச் சடங்களை தான்தான் செய்வேன் என தம்பியிடம் கிஷன் கூறினார். ஆனால் தம்பியோ தானே இறுதிச் சடங்கு செய்வேன் என அடம்பிடித்தார். இதனால் அண்ணன் – தம்பி இடையே தகராறு ஏற்பட்டது.ஏற்கனவே மதுபோதையில் வந்திருந்த அண்ணன் கிஷன், தந்தையின் உடலை வெட்டி அதில் பாதியை தான் இறுதிச் சடங்கு செய்ய தர வேண்டும் என்றும் மீதி பாதி உடலை வைத்து தம்பியை இறுதிச் சடங்கு செய்துகொள்ளுமாறும் தகராறு செய்யத்தொடங்கினார்.
சகோதரர்களின் சண்டையை கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் உடனே போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் மூத்த மகன் கிஷனை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இளைய மகன் தேஷ்ராஜ் தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version