தலவாக்கலையிலிருந்து நாவலப்பிட்டிக்குச் சென்ற பேருந்தின் ஓட்டுநர் செங்குத்தான சரிவுகள் கொண்ட ஆபத்தான தலவாக்கலை நாவலப்பிட்டியா வீதியில் ஆபத்தான சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்திய காட்சிகள் பயணி ஒருவரின் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த சம்பவம் குறித்து, தலவாக்கலை லிந்துனா காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு, பேருந்தின் ஓட்டுநர் குறித்த உண்மைகளை விசாரித்து சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகக் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.