இந்திய நாட்டின் பீஹார் மாநிலம், பாட்னாவிலிருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.பாட்னாவிலிருந்து 175 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த நிலையில், விமானத்தின் மீது பறவை மோதியதையடுத்து, விமானத்தை விமானி பத்திரமாகத் தரையிறக்கியுள்ளார்.இந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தைச் சரிசெய்ய முயற்சிகள் நடந்து வருவதாக பாட்னா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.