நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழை பெய்யக்கூடும்.மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் .இந்நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் இன்று பிற்பகலில் பலத்த மழை
111
previous post