Home » பதவியில் இருந்து நீக்கிய புதின்: சில மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட ரஷிய விமானப் போக்குவரத்து அமைச்சர்

பதவியில் இருந்து நீக்கிய புதின்: சில மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட ரஷிய விமானப் போக்குவரத்து அமைச்சர்

by newsteam
0 comments
பதவியில் இருந்து நீக்கிய புதின்: சில மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட ரஷிய விமானப் போக்குவரத்து அமைச்சர்

உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தலாம் என பாதுகாப்பு அச்சுறுத்தலால் விமானப் போக்குவரத்து பாதிப்பு.
கடந்த வருடம் மே மாதம்தான் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.ரஷியா- உக்ரைன் இடையே 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. தற்போது இரு நாடுகளும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் விமான போக்குவரத்தை மிகவும் நேர்த்தியாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தக்கூடும் என ரஷியாவின் ஏராளமான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து ரோமன் ஸ்டாரோவாய்ட்டை புதின் அதிரடியாக நீக்கினார்.அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரத்தில், ரோமன் ஸ்டாரோவாய்ட் காருக்குள் பிணமாக கிடந்துள்ளார். தற்போது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.கடந்த வருடம் மே மாதம்தான் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்னதாக சுமார் ஐந்து வருடம் குர்ஸ்க் பிரந்தியத்தின் கவர்னராக செயல்பட்டு வந்தார். தற்போது அன்ட்ரெய் நிகிடின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவ்கோரோட் பிராந்தியத்தின் முன்னாள் கவர்னர் ஆவார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!