Home இந்தியா பாகிஸ்தான் யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பாகிஸ்தான் யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

0
பாகிஸ்தான் யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பல யூடியூப் சேனல்களை இந்திய அரசு இப்போது தடை செய்துள்ளது.இதனுடன் பயங்கரவாதிகளை(Terrorists) தீவிரவாதிகள் (Militants) என்று குறிப்பிட்டதற்காக பிபிசி இடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.பாகிஸ்தான் சேனல்கள் மீதான தடை குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவிற்கு எதிராக எரிச்சலூட்டும், வகுப்புவாத கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் தடுக்கப்பட்டுள்ளன.பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 16 யூடியூப் சேனல்களில் (முன்னலா கிரிக்கெட் வீரர்) சோயிப் அக்தரின் சேனல் மற்றும் அங்குள்ள பல முக்கிய ஊடக நிறுவனங்களின் யூடியூப் சேனல்களும் அடங்கும். டான் நியூஸ், சாமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார் டிவி, தி பாகிஸ்தான் ரெஃபரன்ஸ், ஜியோ நியூஸ், சாமா ஸ்போர்ட்ஸ் மற்றும் உசைர் கிரிக்கெட் ஆகியவை முடக்கப்பட்டன என்று தெரிவித்தார் முடக்கப்பட்ட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களில் ஒட்டுமொத்தமாக 63.08 மில்லியன் (6.3 கோடிக்கும்) மேலான பாலோயர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version