Thursday, June 19, 2025
Homeஇலங்கைபாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை குறித்து வெளியான அறிவிப்பு

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை குறித்து வெளியான அறிவிப்பு

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 25 ரூபாவினால் குறைவடைய வேண்டும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்தது போதுமானதல்ல.10 ரூபா விலை குறைப்பு மூலம் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாது.பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க வேண்டுமானால் கோதுமை மா கிலோவொன்றின் விலை 25 ரூபாவினால் குறைவடைய வேண்டும் என கூறியுள்ளார்.ப்ரீமா மற்றும் செரண்டிப் ஆகிய மா ஆலை நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளன.வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ப்ரீமா மற்றும் செரண்டிப் ஆகிய மா ஆலை நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  ஆடைத் தொழிற்சாலையில் பதற்றம் : போனஸ் இல்லாததால் பணியாளர்கள் போராட்டம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!