துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது.பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் விமானிகள் உள்பட 142 பேர் பயணித்தனர்.இந்நிலையில், நடுவானில் சென்றபோது விமானத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதில் 4 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.இதையடுத்து ருமேனியா தலைநகர் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த மீட்புக்குழுவினர் பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். அதன்பின் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 4 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. இது குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகை வெளியேறியதால் 142 பயணிகள் உயிர் தப்பிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் – ருமேனியாவில் அவசர தரையிறக்கம்
81