Wednesday, May 14, 2025
Homeஇலங்கைபேருந்து சாரதி ஒருவர் தொலைபேசியை அவதானித்தபடி பயணியுடன் சண்டை பிடித்துக்கொண்டு பேருந்து ஓடும் காணொளி

பேருந்து சாரதி ஒருவர் தொலைபேசியை அவதானித்தபடி பயணியுடன் சண்டை பிடித்துக்கொண்டு பேருந்து ஓடும் காணொளி

இலங்கையில் பேருந்து சாரதி ஒருவர் தொலைபேசியை அவதானித்தபடி பயணியுடன் சண்டை பிடித்துக்கொண்டு பேருந்து ஓடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.தமிழர் பிரதேசத்தில் குறித்த பேருந்தின் சாரதி கையில் போனை வைத்துக்கொண்டு சண்டை பிடித்த வண்ணம் பேருந்தை ஓட்டுகிறார்.பேருந்தில் இருந்து பெண் ஒருவர் இறக்கத்தில் இறங்க முன்னரே சாரதி பேருந்தை இயக்கியதாக பயணி ஒருவர் சண்டை பிடித்துள்ளார்.அந்த பயணியுடன் கடும் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டுக்கொண்டே சாரதி , பேருந்தை செலுத்தியுள்ளார். அதேவேளை கடந்த நாட்களில் இலங்கையில் பேருந்துகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்த விபத்துக்களில் உயிரிழந்தோர் 40 ஐ அண்மித்துள்ளது. இந் நிலையில் பேருந்தில் , சண்டை பிடித்துக்கொண்டே வாகனத்தை செலுத்தும் சாரதியையும் சமூக ஆர்வர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.

@webtamilnews24

பேருந்து சாரதி ஒருவர் தொலைபேசியை அவதானித்தபடி பயணியுடன் சண்டை பிடித்துக்கொண்டு பேருந்து ஓடும் காணொளி #lankatamilnews #tamilnews #webtamilnews

♬ original sound – Web Tamilnews – Web Tamilnews

இதையும் படியுங்கள்:  மாணவர்களை தாக்கிய ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத் தடை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!