Sunday, August 24, 2025
Homeஇந்தியாமகாராஷ்டிரா மாநில பகுதியில் டியூசனுக்கு போகச் சொன்னதால், 50ஆவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட...

மகாராஷ்டிரா மாநில பகுதியில் டியூசனுக்கு போகச் சொன்னதால், 50ஆவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட மகன்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கண்டிவலியில் இந்தி, குஜராத்தி டி.வி. நிகழ்ச்சியில் நடித்த முன்னணி நடிகை ஒருவர், அப்பார்ட்மென்ட் ஒன்றின் 51-ஆவது மாடியில் வசித்து வருகிறார். இவரது 14ஆவது வயது மகன் பள்ளியில் படித்து வந்துள்ளான்.நேற்றிரவு 7 மணியளவில் நடிகை, தனது மகனிடம் டியூசனுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அவரது மகன் டியூசனுக்கு செல்ல தயங்கியுள்ளான். பலமுறை தாய் வற்புறுத்தியதால், வீட்டில் இருந்து வெளியேறியுள்ளான்.51ஆவது மாடியில் இருந்து, 50ஆவது மாடிக்கு இறங்கி வந்த அவன், திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

மகன் டியூசனுக்கு சென்றுவிட்டான் என நடிகை நினைத்துக் கொண்டிருந்த நிலையில், வாட்ச்மேன் நடந்த சம்பவத்தை அவரிடம் சொல்லியுள்ளார். நடிகை வந்து பார்க்கும்போது மகன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி துடித்தார்.தற்செயலான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சந்தேகத்திற்குரிய வகையில் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்த நிலையில், விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  158 ஆண்டுகள் பழமையான நிறுவனம் மூடப்பட்டது – காரணம் ஒரு பலவீனமான Password
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!