இலங்கையின் பிரபல நிறுவனம் ஒன்றின் வர்த்தக இலட்சினையை பயன்படுத்தி அதனூடாக பாரிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிரமிட் திட்டம் ஒன்றை இயக்கி சமூக ஊடகங்கள் வாயிலாக 68 கோடி ரூபாவுக்கு மேலான தொகையை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை கண்டி குற்றப்புலனாய்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.சமூக ஊடக கணக்குகள் வாயிலாக பல்வேறு போட்டிகளை நடத்தி, மக்களை ஏமாற்றிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 26 வயது. இவர் கம்பஹா வத்துமுல்லை பிரசேத்தை சேர்ந்தவர் மற்றைய சந்தேக நபர் 27 வயதுடையவர் இவர் ராகம பட்டுவத்தையை சேர்ந்தவர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களை ஏமாற்றி 68 கோடி ரூபாவை மோசடி செய்த கும்பல்
By newsteam
0
75
Previous article
Next article
RELATED ARTICLES