மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மூதாட்டி கங்கா (வயது 72). இவரது மகன் கமலேஷ் (வயது 46). இதனிடையே, கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட கமலேஷ் கடந்த 3 ஆண்டுகளாக டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கமலேசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.இந்நிலையில், மகன் கமலேசுக்கு தனது கிட்னியை தானமாக வழங்க கங்கா முன்வந்தார். கங்காவின் 2 கிட்னிகளும் நல்ல நிலையில் உள்ளன என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன் தினம் அறுவை சிகிச்சை மூலம் கங்காவின் ஒரு கிட்னி கமலேசுக்கு பொருத்தப்பட்டது. இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது
மத்தியபிரதேசத்தில் மகனுக்காக தனது கிட்னியை தானமாக வழங்கிய 72 வயது தாய்
55