Home இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள், எம்.பிக்களின் ஓய்வூதியங்களை இரத்துச்செய்ய அமைச்சரவை அனுமதி

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள், எம்.பிக்களின் ஓய்வூதியங்களை இரத்துச்செய்ய அமைச்சரவை அனுமதி

0
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள், எம்.பிக்களின் ஓய்வூதியங்களை இரத்துச்செய்ய அமைச்சரவை அனுமதி

1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதி உரித்துக்கள் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டங்களை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.சமகால அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு முன்வைத்துள்ள “வளமான நாடு அழகான வாழ்வு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைளை இரத்துச் செய்வதற்காகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 05 வருடங்களுக்குப் பின்னர் வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கும் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.இவற்றை இரத்துச்செய்யும் வகையில் 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டங்களை இரத்துச் செய்வதற்காக 02 சட்டமூலங்களைத் தயாரிப்பதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version