உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாய் தற்போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.32 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார். அவரது கணவர் சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்ததாகவும், 34 வயதான அவர் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் 12, 10 மற்றும் 5 வயதான மூன்று பிள்ளைகளும் (ஆண்கள் பிள்ளைகள்) இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இருப்பினும், பிள்ளைகள் தற்போது உடுதும்பர பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.இறந்த பெண்ணும் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.