யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கர்ப்பமடைந்துள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த சிறுமி 5 மாதங்கள் கர்ப்பமாகிய நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.இதுகுறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் குறித்த சிறுமியை பல தடவைகள் துஷ்பிரயோகம் செய்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் கைது
By newsteam
0
55
Previous article
RELATED ARTICLES