Thursday, July 3, 2025
Homeஇலங்கைவவுனியா பகுதியில் மனைவியும் மாமியாரும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா பகுதியில் மனைவியும் மாமியாரும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா சமயபுரம் பகுதியில் தனது மனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று (2) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,
வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ளவீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு வருகைதந்த உயிரிழந்தநபர் வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்திகாயப்படுத்தியுள்ளார்.அதனைத்தொடர்ந்து வீட்டினை தீயிட்டு கொழுத்திஉள்ளார். இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில் குறித்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடும்பஸ்தர் வீட்டின் கிணற்றில் வீழ்ந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தரும், காயமடைந்த பெண்ணும் வெவ்வேறு பகுதிகளை சேந்தவர்கள் என கிராமமக்கள் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கடந்த ஒரு வருடகாலமாக சமயபுரம் பகுதியில் வசித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.அத்துடன் அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.சம்பவத்தில் 30 வயதான பெண்னும் அவரது தாயாரும் , காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.சம்பவத்தில் கிருஸ்ணகுமார் வயது 45 என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் Clean SriLanka
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!