மாத்தளை, அலவ்வ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாக கூறி, பௌத்த துறவி ஒருவர் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாத்தளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 38 வயதான பௌத்த துறவி, அலவ்வ பகுதியின் விகாரை ஒன்றைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டபோது, அவரிடம் இருந்து 10 கிராம் ஹெரோயின் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.ஏனைய இருவரிடம் இருந்தும் 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அவர்கள் மூவரும் மினுவாங்கொடையைச் சேர்ந்த நேவி தினேஸ் என்பவரின் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.