அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் பாராசூட் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற இடமாக திகழ்கிறது. இதனால் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அங்கு குவிவது வழக்கம். அந்தவகையில் மிட்செல் டீக்கின் (வயது 25) என்ற வாலிபர் பாராசூட்டில் பறந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பாராசூட் திடீரென செயலிழந்தது.இதனால் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இந்த விபத்தில் அவரது பயிற்றுவிப்பாளருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் விமானம் மூலம் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தும் உயிர் தப்பிய அதிசயம்
15