Friday, September 12, 2025
Homeஇலங்கை2026 கல்வியாண்டுக்கான மாணவர்களின் சீருடை துணிகளை மானியமாக வழங்க சீனா இணக்கம்

2026 கல்வியாண்டுக்கான மாணவர்களின் சீருடை துணிகளை மானியமாக வழங்க சீனா இணக்கம்

அரசாங்கத்தின் மற்றும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் 4,418,404 பாடசாலை மாணவர்களுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு தீர்மானிக்கப்பட்ட சகல சீருடைகளையும் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக வழங்குவதற்கான இணக்கப்பாடுகளுடன் சீருடைகளைப் பரிமாறும் நிகழ்வு நேற்று (11) பத்திரமுல்லை கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது.கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, சீன தூதுவர் கிவ் ஸெங்க்ஹொங் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன் போது 2026ஆம் ஆண்டுக்கான பிள்ளைகளை வழங்குவதற்கு இணக்கத்தை தெரிவிக்கும் சான்றிதழை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ மற்றும் சீன தூதுவர் கிவ் ஸெங்ஹொங் இடையே இடம்பெற்றது .

இங்கு கருத்து தெரிவித்த கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுரை ஜனவரி “2025ஆம் ஆண்டுக்காக 11.82 மில்லியன் மீட்டர் துணி சீனாவிடம் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.இதனால் முழு தேசிய அவசியத்தவையும் பூரணப்படுத்துவது போல் நாடு முழுவதும் உள்ள 4.6 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு நன்மை கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.5.17 வில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி பங்களிப்பு, சிறுவர்கள் முதல் தேசிய பரீட்சைக்காக மாணவர்கள் வரை ஒவ்வொரு பிள்ளைக்கும் கௌரவம் மற்றும் சமத்துவத்துடன் கல்வி கற்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்காக இவ்வாறான பங்களிப்பை வழங்கியமை வரவேற்கப்பட வேண்டும்” என்றார்.இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் 2026 ஆம் ஆண்டுக்கான சீருடைகளை வழங்குவது தொடர்பாக விரைவாக பதில் அளித்த இலங்கை மற்றும் சீன அரசாங்கங்களுக்கிடையே காணப்படும் அந்நியோன்ய நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான ஏற்பாடாகவும் இது காணப்படுவதாக குறிப்பிட்டார். இந்நிகழ்வில் சீன தூதுவராலயம் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

இதையும் படியுங்கள்:  எச்சரிக்கையை மீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் கட்டைக்காடு மீனவர்கள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!