இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 4, 2025 திங்கட் கிழமை) சந்திரன் பகவான் விருச்சிக ராசியில் அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். புதாதித்ய யோகம் உள்ளது. இன்று மரண யோகம் கூடிய தினம். இன்று மேஷ ராசியினருக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷ ராசி பலன்
மேஷ ராசிக்கு நல்ல நாளாக இருக்கும். வேலை தொடர்பாக இருக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. இன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் விஷயங்களில் கவனம் தேவை. முதலீடுகளைத் தவிர்ப்பது அவசியம். கோபத்தால் சூழல் சாதகமற்றதாக மாற வாய்ப்பு உண்டு. உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்படவும். இன்று செவாக்கு மிக்க நபர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. பொழுதுபோக்கு விஷயங்களில் அதிகம் நாட்டம் காட்டுவீர்கள்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசிக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் சிரமங்கள் நிறைந்திருக்கும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ஆளுமை திறன் நிரூபிக்க முடியும். பணிகளை சரியான நேரத்தில் திட்டமிட்டு செய்து முடிக்கவும். உடல் நலம் தொடர்பாக கவனமாக இருக்கவும். மாணவர்கள் படிப்பில் சந்தித்த பிரச்சனைகள் தீரும். சமூக பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுகிறது. இன்று குடும்பத்தினருடன், நண்பர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்கு சாதகமான நாளாக இருக்கும். இன்று உங்கள் வேலைகளில் திட்டமிடுவதும், உடல் நலத்தில் கவனமாக செயல்பட்டால் வேலைகளை சரியாக செய்து முடிக்க முடியும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியும். நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. இன்று தொழில் தொடர்பான வேலைகளுக்கு அதிக உழைப்பு தேவைப்படும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம்.
கடக ராசி பலன்
கடக ராசிக்கு மிகவும் நல்ல நாளாக அமையும். உங்கள் வாழ்க்கையில் நிறைய வெற்றிகள் பெறலாம். பழைய முதலீடுகள் மூலம் நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். இன்று உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. எதிர்காலம் தொடர்பான கவலைகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் இருக்கும். இன்று உங்கள் செயல்பாடுகளுக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்கு இன்று மிகவும் சாதகமான நாள். அன்றாட பணிகளை மும்முரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் உடல் நலம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகள் வரக்கூடும். உறவினர்கள் மூலம் ஆதரவும், பரிசும் கிடைக்க வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கையில் இனிமையான சூழல் இருக்கும். அரச வேலைக்கு தயாராக கூடிய நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இன்று அதிக உற்சாகத்துடன் இந்த வேலை அல்லது முடிவுகளை செய்ய வேண்டும். இன்று உங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்கு சாதகமான நாளாக இருக்காது. உங்கள் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சிக்கல்கள் சந்திக்க நேரிடும். உடல் நலனில் கவனம் செலுத்தவும். இன்று குடும்ப விஷயங்களில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். திருமண வாழ்க்கையில் துணையுடன் அன்பு அதிகரிக்கும். உங்கள் வேலைகளை செய்து முடிப்பதில் அதிக நேரம் தேவைப்படும். பேச்சில் கவனமாக இருப்பதும், செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்கு சிறந்த நாளாக அமையும். உங்கள் பணிகளில் மாற்றம் ஏற்படும். உங்கள் கடினமான செயல்பாடுகளால் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்ப உறவுகளை மேம்படுத்துவதற்கு சாதகமான நாள். நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். காதல் விஷயத்தில் அழகான சூழல் இருக்கும். இன்று உங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவும். புதிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
விருச்சிக ராசி பலன்
இன்று உங்களுக்கு சாதகமான சூழல் இருக்கிறது. உங்கள் செயல்பாடுகளில் கவனம் தேவை. வேலைகளை சரியான நேரத்தில் முடித்து முயலவும். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் நிச்சயமாக தன்மைகளை கடக்க வேண்டியது இருக்கும். உங்கள் இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்தவும். சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்வதன் நல்லது. நிதிநிலை சிறப்பாக இருக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்கு இன்று மிகவும் அழகான நாளாக இருக்கும். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு உண்டு. குடும்ப பிரச்சினைகளில் சில தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று எந்த ஒரு பிரச்சனைகளையும் இனிமையான பேச்சால் தீர்க்க முடியும். வேலை தொடர்பாக கவனம் செலுத்தவும். உங்களுக்கு நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். விருப்பப்படி செலவுகளைச் செய்ய நினைப்பீர்கள்.
மகர ராசி பலன்
மகர ராசிக்கு இன்று பெரிய அளவில் சாதம் மாற்ற சூழல் இருக்கும். பணியிடத்தில் எதிரிகளின் விஷயத்தில் கவனம் தேவை. வேலை தொடர்பாக உங்கள் யோசனைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் சச்சரவுகள் நிறைந்திருக்கும். கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்படவும். இன்று பண பற்றாக்குறை சந்திக்க வாய்ப்பு உண்டு. கோபம் உங்கள் வேலையை கெடுக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படவும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்கு இன்று சாதகம் மற்ற நாளாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்தவும். சரியாக திட்டமிட்டு செய்யக்கூடிய வேலையில் முன்னேற்றம் உண்டாகும். வணிகம் தொடர்பாக புதிய கூட்டணியை அமைப்பீர்கள். உங்கள் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். அதே சமயம் அதன் தரத்தை சரி பார்ப்பது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள சிரமங்கள் தீர்க்க முயற்சி செய்யவும். உங்கள் காதல் உறவை வலுவாக்க முயற்சி செய்யவும். உடல் நலம் தொடர்பாக கவலை ஏற்படும்.
மீன ராசி பலன்
மீன ராசிக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் வெற்றிக்கான வாய்ப்பு உண்டு. உங்கள் மனைவியுடன் இனிமையாக பேசவும் நேரத்தை செலவிடவும் முயற்சி செய்யவும். இன்று பிரச்சனைகளை தீர்ப்பதில் வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய திட்டங்கள் வெற்றியை தரும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். நிதி சார்ந்த நன்மை கிடைக்கும். உறவுகள் மேம்படுத்த முயற்சி செய்யவும்.