இன்று ஆவணி 30, (செப்டம்பர் 15), திங்கள் அன்று சந்திரன் மிதுன ராசியில் பயணிக்கிறார். இன்று சுக்கிரன் சிம்மத்தில் பெயர்ச்சியாகிறார். சுக்கிர அருளால் மிதுனம், சிம்ம ராசிக்கு அற்புத பலன் கிடைக்கும். இன்று விருச்சிக ராசியில் உள்ள விசாகம், அனுஷம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷ ராசி பலன்
மேஷ ராசிக்கு இன்று தர்ம வேலைகளில் நாட்டம் கொள்வீர்கள். இது உங்கள் மன அமைதியை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சில மாற்றங்களை காண்பீர்கள். உங்களின் சக ஊழியர்களின் மனநிலையை உணர்ந்து செயல்படவும். தேவையற்ற வம்பு, விவாதங்களில் ஈடுபட வேண்டாம். இன்று உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியிடத்திலும் குடும்பத்திலும் சில பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் மனிதனும் தொடர்பாக சில நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களின் நிதிநிலை வலுவாக இருக்கும். லாபத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். இன்று நீங்கள் சில சுப காரியங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும். அவசியமற்ற சில பயணங்கள் தள்ளி வைப்பது நல்லது. போட்டிக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு தந்தை அல்லது மேலதிகாரிகளின் ஆசீர்வாதத்தால் உங்களின் செயல்பாடுகள் சிறக்கும். அதனால் பொருள் சேர்க்கை, தன ஆதாயம் பெறுவீர்கள். இன்று புதிய சொத்து வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பரபரப்பான சூழலுக்கு நடுவே துணையின் ஆதரவு உங்களுக்கு முன்னேற்றத்தை தரும். திருமண வரம் தேடும் முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று எந்த சூழ்நிலையும் நிதானமாக கையாள்வதும், கோபத்தை கட்டுப்படுத்துவதும் அவசியம்.
கடக ராசி பலன்
கடக ராசியை சேர்ந்தவர்கள் உங்கள் தொழிலில் பணம் லாபம் அதிகரிக்கும். உங்களுக்கு தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்ய அதிக பணம் செலவிடும். இன்று பெற்றோருடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். அவர்களுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நல்லது. உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். மாமியார் வீடு மூலம் ஆதரவு அல்லது நிதி நன்மைகளை பெறுவீர்கள்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் அரசியல் தொடர்பான விஷயங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல பலனும் வெற்றியையும் பெறலாம். உங்களின் குழந்தைகள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள். இதனால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உங்கள் குடும்ப சூழல் சிறப்பாக இருக்கும் என்பதால் சிரிப்பும் வேடிக்கையும் நிறைந்த நாளாக அமையும். இன்று நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் வானத்தில் கவனமாக இருக்கவும். இல்லை எனில் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை முடிக்க முடியும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று சேவை செய்வது மற்றும் விருந்தோம்பல் போன்ற வேலைகளில் நேரத்தை செலவிடுவீர்கள். இன்று சில நல்ல காரியங்களுக்காக பணத்தை செலவிடுவீர்கள். இது உங்கள் மனமகிழ்ச்சியை அதிகரிக்கும். உங்களின் புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் எதிரிகளை எளிதாக வெல்ல முடியும். அரசு வேலை தொடர்பான முயற்சிகள் நல்ல பலன் கிடைக்கும். இன்று சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சிலருடன் சேர்ந்து கூட்டாக செய்யும் தொழிலில் நல்ல லாபம் பெறலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்கள் பேச்சு மற்றும் செயல் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கிய ஏற்ற இறக்கமான சூழல் இருக்கும். இன்று கடினமான சூழலில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வணிகம் தொடர்பாக பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் எதிர்பார்த்ததை விட நிறைய லாபத்தை பெறலாம். புதிய வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலையில் இருந்த அலைச்சல் குறையும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. அதனால் உங்கள் செயல்பாடுகளில் நிதானம் தேவை. செலவுகளை கட்டுப்படுத்தவும். இன்று உங்களின் நிதானமான செயல்பாடு மரியாதையை பெற்று தரும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். உங்கள் பெற்றோருடன் ஆன்மீக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். இன்று உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். நீங்கள் வேளையில் எதிர்பார்க்க உயர்வு கிடைக்க தாமதம் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி சேர்ந்தவர்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்ற அதிக பணம் செலவிடுவார். இன்று ஆடம்பர பொருட்களை வாங்க நினைப்பீர்கள். பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இதனால் உங்களின் உடல் மற்றும் மனச்சோர்வு அதிகரிக்கும். உங்கள் வேலைகளை முடிக்க திட்டமிட்டு செயல்படுவோம். வணிகம் தொடர்பாக முன் நின்ற நாட்களை எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் குழந்தைகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும். காதல் விஷயத்தில் இனிமையான சூழல் இருக்கும்.
மகர ராசி பலன்
மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள். இன்று இலக்கை நிர்ணயித்து அதற்கான திட்டமிடலுடன் செயல்பட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும். உங்களின் நிதி நிலை முன்பு விட வலுவாக இருக்கும். உங்கள் வருமானம் மற்றும் செலவுகள் மனதில் கொண்டு செயல்படவும். இன்று எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்கும் முயற்சி செய்யவும். வண்டி வாகன பயணங்களின் போது கவனமாக இருக்கவும். இன்று வாகனப் பழுதால் செலவுகள் அதிகம்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசி சேர்ந்தவர்கள் புதிய சொத்து வாங்க வாய்ப்புகள் உண்டு. வாங்குவது அல்லது விற்பது தொடர்பாக ஆவணங்களை கவனமாக சரி பார்க்கவும். இன்று உங்கள் துணையின் உடல் நலம் சற்று குறைபாடுகள் ஏற்படும். உங்கள் வேலைகளையும் முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையில் சில விவாதங்களால் மன அழுத்தம் சந்திக்க நேரிடும். இன்று கடன் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
மீன ராசி பலன்
மீன ராசி சேர்ந்தவர்களுக்கு உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான பயணம் செல்ல நினைப்பீர்கள். இந்த தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். மாணவர்கள் படிப்பிலும் ஆராய்ச்சி பணிகளிலும் முன்னேற்றம் அடைவார்கள். கல்வி தொடர்பாக இருந்து வந்த மன அழுத்தம் குறையும். இன்று பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். குழந்தைகள் என்னை எதிர்காலம் தொடர்பாக பெற்றோருக்கு கவலை அதிகரிக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் அவசரப்பட வேண்டாம்.