இன்று செப்டம்பர் 19, புரட்டாசி 3ம் தேதி வெள்ளிக்கிழமை சிம்மத்தில் சந்திரன், கேது, சுக்கிரன் ஆகியோரின் சஞ்சாரம் உள்ளது. இன்று மகரத்தில் உள்ள உத்திராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று மிதுனம் மற்றும் கும்பம் உள்ளிட்ட ராசிகளுக்கு குடும்ப ஆதரவு, லாபம் கிடைக்கும்.
மேஷம் ராசிபலன்
மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு பணி சூழலில் உள்ள பிரச்சினைகளை சமாளிக்க சில மாற்றங்கள் கொண்டு வேண்டிய நாள். இன்று சங்க ஊழியர்களின் மனநிலை வருத்தப்பட வாய்ப்பு உண்டு. அதனால் அனைவரிடத்திலும் அன்பாகவும், கனிவான பேச்சுடன் நடந்து கொள்வது நல்லது. இன்று குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை மோசமடைவதால் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். தான தர்மங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் தங்களின் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் தீர்த்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு சூழல் குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருக்கும். உடன் பிறந்தவர்களின் எதிர்காலம் குறித்த யோசிப்பீர்கள். இன்றும் உங்கள் செயல்பாடு குடும்பத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளை சரியாக முடிக்க முடியும். உங்கள் மாமியார் வீட்டில் இருந்து சில நல்ல செய்திகளை கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று சில இனிமையான அனுபவங்களைப் பெறுவீர்கள் மாலை நேரத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு வேலை மாற்றங்களை சந்திக்க புதிய யோசனையுடன் செயல்படவும். தந்தையின் ஆசீர்வாதம் கிடைக்கும். மேலதிகாரிகளின் அருளால் முன்னேற்றம் உண்டாகும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறக் கூடிய நாளாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். மாணவர்கள் படிப்பை சிறந்து விளங்குவார்கள். கலைத்துறையில் உள்ளவர்கள் தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லுதல் நல்லது அல்லது வேறு புதிய வாய்ப்புகள் உள்ளனவா என சிந்திக்கவும். உங்கள் திருமண வாழ்க்கையில் நேரம் செலவிட முயலவும்.
கடக ராசி பலன்
கடக ராசி சேர்ந்தவர்கள் முக்கியமான முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதை எடுப்பதில் அவசரப்படுவது அல்லது உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும். இன்று உங்களின் எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகமாக இருக்கும். ஏதேனும் ஒரு வகையில் பெரிய நிதி நன்மைகள் கிடைக்கும். அது உங்கள் பொருளாதாரத்தைக் குணப்படுத்தும். இன்று உங்களின் குலதெய்வம் கோவில் அல்லது அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். இன்று வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வணிக திட்டங்கள் மேகம் அடையவும். உடல் நலமாக தொந்தரவுகள் சரியாகும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று உடல் நலனில் கூடுதல் தேவை. குறிப்பாக உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு மற்றும் சரி மீது உணவுகளை எடுத்துக் கொள்ள முயற்சிக்கவும். வணிகத்தில் உங்களின் போட்டியிடும் திறந்து அதிகமாக இருக்கும். இன்று உங்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்லது. நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். இன்று உங்கள் மனைவியின் ஆலோசனை சொந்த தொழில் நன்மை தரக்கூடியதாக அமையும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி நண்பர்களுக்கு தொழிலில் ஏராளமான நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களின் குடும்ப வாழ்க்கையில் நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும். கலைத்துறையில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் படைப்பாற்றல் வெளிப்படுத்துவீர்கள். இன்று உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புகள் உண்டு.தேர்வுக்கு தயாராக கூடிய மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் வருமான ஆதாரம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் செயல்பாடுகளால் சிறப்பு மரியாதை கிடைக்கும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். இன்று உங்கள் வேலையை முடிப்பது தொடர்பாக அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். வெளியூர் வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வணிகத்தில் புதிய திட்டங்களை வகுத்து செயல்படுவது நல்லது.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு அன்புக்குரியவர்களிடமிருந்து பரிசு கிடைக்கும். இன்று உங்களின் நண்பர்களை சந்திக்கவும், அவர்களிடம் உங்களுடைய மனக்குறையைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் மனம் மகிழ்ச்சியும், கவலை தீரும். இன்று உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். இல்லையெனில் பாதகமான சூழ்நிலை ஏற்படலாம். உங்களின் நிதிநிலை அதிகரிக்க கூடிய நாள். உங்களின் செல்வாக்கு, புகழ் அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முதலீடு அல்லது செலவுகள் செய்வீர்கள். வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு உண்டு.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று வீட்டு உபயோகத்திற்கான பொருட்களை வாங்குவது தொடர்பாக செலவுகள் அதிகரிக்கும். இன்று உங்களின் பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனமாக இருக்கவும். அரசு தொடர்பான வேலைகளை கவனம் தேவை. நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு நல்ல சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று எதிரிகள் சற்று பலமாக இருப்பார்கள். அதனால் எந்த ஒரு சூழலிலும் கவனமாக செயல்படவும். இன்று மூத்தவர்கள் மற்றும் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
மகர ராசி பலன்
மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று உணவு துறை தொடர்பான நபர்கள் கவனமாக இருக்கவும். உங்களின் அற்புத குறையும் அல்லது செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சாதகமான லாபம் பெற கடின உழைப்பு தேவைப்படும். உங்களின் நிதி நிலை முன்பு விட வலுவாக இருக்கும். இன்று மகிழ்ச்சியாக உணருவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் பெற சரியான திட்டமிடலும் உழைப்பும் தேவைப்படும். இன்று மூத்த அதிகாரிகளின் ஆலோசனை நல்ல பலனைத் தரும். இன்று ஆன்மீகப் பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு. குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வீர்கள்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசி சேர்ந்து அவர்களுக்கு குடும்ப உறவுகளையும் உங்கள் துணையையும் அனுசரித்து செல்ல வேண்டிய நாள். இன்று சில விஷயங்களுக்காக அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும். வாங்குவது அல்லது விற்பது தொடர்பான விஷயங்களில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். ஆவணங்களைச் சோதிப்பது நல்லது. இன்று உறவினர்களை அனுசரித்து செல்லவும். தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள்.
மீன ராசி பலன்
மீன ராசியை சேர்ந்தவர்கள் சில நாட்களாக தடைப்பட்டு வந்த பணிகளை முடிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். இன்று வீடு, வாகனம் வாங்குவது தொடர்பாக யோசிப்பவர்கள் மூத்தவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. திருமண வாழ்க்கையில் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்று வணிகம் செய்யக்கூடிய நபர்களுக்கு லாபம் கிடைக்கும். இன்று உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறார்கள். நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். பழைய நண்பர்களுடன் சிறிய பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.