Home உலகம் நியூயோர்க் காவல்துறை தடுத்ததால் 30 நிமிடம் நடைபயணம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்

நியூயோர்க் காவல்துறை தடுத்ததால் 30 நிமிடம் நடைபயணம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்

0
நியூயோர்க் காவல்துறை தடுத்ததால் 30 நிமிடம் நடைபயணம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அமெரிக்க காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.ஐ.நா. தலைமையகத்தில் தனது உரைக்குப் பிறகு பிரான்ஸ் ஜனாதிபதி நியூயோர்க் வழியாக காரில் சென்று கொண்டிருந்த நிலையில், ட்ரம்பின் வாகன அணிவகுப்பு காரணமாக வீதிகள் மூடப்பட்டமையால் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.அந்தச் சந்தர்ப்பத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தொலைபேசியில் அழைத்துப் பேசிய போதும், அந்த முயற்சி பயனளிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனால் அவர், பல நிமிடங்கள் காத்திருந்த பிறகு வீதி, பாதசாரிகளுக்கு மாத்திரம் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐ.நா. பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக இம்மானுவேல் மக்ரோன் நியூயோர்க் சென்றுள்ள நிலையில், அவர் பிரான்ஸ் தூதரகத்திற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது அவரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.இதனால் பிரான்ஸ் தூதரகத்துக்கு சுமார் 30 நிமிடங்கள் வீதியில் நடந்து செல்ல வேண்டிய நிலைமை பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version