Home இலங்கை அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பு தொடர்பில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பு தொடர்பில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் : ரணில் விக்ரமசிங்க

0
அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பு தொடர்பில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் : ரணில் விக்ரமசிங்க

நாட்டில் தற்போது நிலவும் சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பு தொடர்பில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி, கட்டுஹெம்பலாவில் உள்ள மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை சென்றிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அங்கு மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதன்போது சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பு குறித்து கவலைகளை தெரிவித்ததோடு, சிலர் ஒரு தேங்காய் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த முறை 10 கிலோ சிவப்பு அரிசியை வழங்கியவர் ரணில் விக்கிரமசிங்க என அங்கு குடியிருந்த பொதுக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“ஐயா, நீங்கள் தான் எங்கள் நம்பிக்கை, எங்களுக்கு நீங்கள் தேவை” எனவும் தெரிவித்துள்ளனர்.இதற்கு என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version