Home இந்தியா ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம்பெண்- மீட்பு பணிகள் தீவிரம்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம்பெண்- மீட்பு பணிகள் தீவிரம்

0
ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம்பெண்- மீட்பு பணிகள் தீவிரம்

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள கண்டேராய் கிராமத்தில் 18 வயது இளம்பெண் நேற்று காலை ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டார். பூஜ் தாலுகாவில் உள்ள கிராமத்தில் நேற்று காலை இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இளம்பெண்ணின் குடும்பத்தினர் ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள். 540 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 490 அடி ஆழத்தில் இளம்பெண் சிக்கி உள்ளதாக புஜ் துணை ஆட்சியர் ஏபி ஜாதவ் தெரிவித்தார்.இளம்பெண் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது குறித்து அதிகாரிகள் ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டிருந்தனர். பின்னர் கேமராவின் உதவியுடன் கிணற்றுக்குள் பெண் இருப்பதை உறுதி செய்துள்ளனர். உள்ளூர் மீட்புக் குழு தொடர்ந்து ஆழ்துளை கிணற்றில் ஆக்ஸிஜனை சப்ளை செய்து வருகிறது.

இளம்பெண் மயக்கத்தில் இருக்கிறார். உள்ளூர் மீட்புக் குழுவினரால் அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. அவரை வெளியே கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.சிக்கியுள்ள பெண்ணை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை குழுக்களும் அழைக்கப்பட்டுள்ளதாக துணை ஆட்சியர் தெரிவித்தார்.இளம்பெண் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version