Home இந்தியா ஓநாய்கள் தாக்கி குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

ஓநாய்கள் தாக்கி குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

0
ஓநாய்கள் தாக்கி குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் உத்தர பிரதேசத்தின் இந்தோ-நேபாள எல்லை மாவட்டமான பஹ்ரைச்சில் உள்ள மஹாசி தொகுதியின் 30 கிராமங்களில் ஓநாய்கள் கூட்டத்தால் 6 குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர். இந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளனர்.ஓநாய்கள் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால், இப்பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக தூக்கமின்றி தவிக்கும் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் காவல் காத்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

இதுவரை 3 ஓநாய்களை பிடித்துள்ள வனத்துறையினர் அவைகளை லக்னோ உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வனத்துறையினர், தெர்மல் ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களுடன் ஓநாய்களை தேடிவருகின்றனர்.இது தொடர்பாக பஹ்ரைச் மாவட்டத்தின் வனத்துறை அதிகாரி கூறுகையில், “ஜூலை 17 அன்று ஓநாய் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக முதல் சம்பவம் பதிவாகியுள்ளது.தெர்மல் ட்ரோன்களின் உதவியுடன் ஓநாய்களின் கூட்டத்தை பிடிக்க அதிகாரிகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். 6 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓநாய்கள் வழித்தடங்களில் 4 பொறிகள் வைத்துள்ளோம்” என்று கூறினார்.

வன அதிகாரிகளின் மதிப்பீட்டில், மனிதர்களை மட்டுமே தாக்கும் 5-6 ஓநாய்கள் இப்பகுதியில் உள்ளன.20 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்கள் இந்த பகுதிக்கு திரும்பி உள்ளன. 2004-ம் ஆண்டில், ஓநாய்களின் வெவ்வேறு தாக்குதல்களில் சுமார் 32 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 2020-ம் ஆண்டிலும் ஓநாய் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வந்துள்ளன.குழந்தைகளுடன் குடும்பமாக திறந்த வெளியில் தூங்க வேண்டாம் என அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version