இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நகை கடைக்குள் புகுந்து உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிவாண்டி பகுதியில் பிரபல நகைக்கடைக்குள் 23 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.அப்போது, நகைக்கடையில் இருந்தவர்களை சரமாரியாக கொள்ளை கும்பல் தாக்கியது.கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சிங் உயிரிழந்துள்ளார். அவரது தம்பிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.நகைக்கடையில் இருந்த நகைகளை அள்ளிச்சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.வெறும் 4 நிமிடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.