Home இந்தியா வீட்டில் வேலை செய்த பெண் மீது திருட்டு புகார் அளித்த நகைக்கடைக்காரர் மீது பாய்ந்த கற்பழிப்பு...

வீட்டில் வேலை செய்த பெண் மீது திருட்டு புகார் அளித்த நகைக்கடைக்காரர் மீது பாய்ந்த கற்பழிப்பு வழக்கு

0
வீட்டில் வேலை செய்த பெண் மீது திருட்டு புகார் அளித்த நகைக்கடைக்காரர் மீது பாய்ந்த கற்பழிப்பு வழக்கு

விஷயத்தை மூடிமறைக்க, நகைக்கடைக்காரர் அவளிடம் பணத்தை கொடுத்துள்ளார். விவகாரம் குறித்து நாங்கள் முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம் என்று அதிகாரி கூறினார்.ரூ.15 ஆயிரம் பணத்தை திருடியதாக தனது வீட்டில் வேலை செய்த பெண்ணின் மீது புகார் நகைக்கடைக்காரர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட பெண் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நகைக்கடைக்காரர் வீட்டில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி நகைக்கடைக்காரர் அப்பெண்ணிடம் முதலில் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஜூன் மாதத்திற்கு பிறகு நகைக்கடைக்காரரர் அப்பெண்ணிடம் விரும்புவதாகவும் கூறி அவரை பலமுறை கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளார். நாளுக்குநாள் நகைக்கடைக்காரரின் தொல்லை அதிகரிக்கவே, இதுகுறித்து அவரது மனைவியிடம் தெரிவிக்க பணிப்பெண் முடிவு செய்துள்ளார். இருப்பினும் நகைக்கடைக்காரர் இதுகுறித்து வெளியே கூறினால் கணவரையும், குழந்தையையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

கடந்த ஜூலை 18-ந்தேதி, நகைக்கடைக்காரர் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தை மூடிமறைக்க, நகைக்கடைக்காரர் அவளிடம் பணத்தை கொடுத்துள்ளார். இருப்பினும் அப்பெண் வாங்க மறுத்துவிட்டாள். இதைதொடர்ந்து, நகைக்கடைக்காரர் அப்பெண் மீது பணத்தை திருடியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து போலீசார் அப்பெண்ணை கைது செய்து விசாரித்தபோது, முதலில் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்ட அப்பெண், பிறகு மனமுடைந்து அழுது நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் நகைக்கடைக்காரர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். நகைக்கடைக்காரர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளான கற்பழிப்பு, தாக்குதல் மற்றும் கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தினார். மேலும் “குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கை நடைபெற்று வருகிறது, மேலும் இந்த விவகாரம் குறித்து நாங்கள் முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம்” என்று அதிகாரி கூறினார்.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version