இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (BCCI) இது தொடர்பில் அவர் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள நிலையில், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.இதுவரை 210 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்திய அணிக்காக 9,230 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.அவற்றில் 30 சதங்களும் 31 அரைசதங்களும் அடங்கும்.