Home ஜோதிடம் இன்றைய ராசி பலன் – 20-09-2025

இன்றைய ராசி பலன் – 20-09-2025

0
இன்றைய ராசி பலன் - 20-09-2025

இன்றைய தின பலன் படி செப்டம்பர் 20, புரட்டாசி 4, முதல் சனிக்கிழமை ஏழுமலையானின் நல்லருள் நிரம்பிய நாளில் சந்திரன் சிம்ம ராசியில் பயணிக்கிறார். இன்று சுனபா யோகம் உருவாகிறது. மகரத்தில் உள்ள உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம். நல்லருள் பெற அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்லவும்.

மேஷ ராசி பலன்

மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று பணியிடத்தில் சில மாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படு.ம் இன்று உங்கள் பேச்சை இனிமையை கடைப்பிடிக்கவும். இன்று குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் சற்று மோசமடையும். இதனால் சிரமங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. காதல் வாழ்க்கையில் பதட்டமான மனநிலை இருக்கும் இரண்டு மாணவர்களின் சந்தேகங்கள் தீரும்.

ரிஷப ராசிபலன்

ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க வாய்ப்புகள் உண்டு. இன்று குழந்தைகள் இருந்த உடன்பிறந்தவர்களின் எதிர்காலம் குறித்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். இது உங்கள் முழு குடும்பத்திற்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். உடல் நலம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடின முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். இன்று பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டில் மாலை நேரத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு வேலை மாற்றுவது தொடர்பான விஷயங்களை நிதானமான போக்கு தேவை. சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் ஆசீர்வாதத்தால் குடும்ப தொழிலை முன்னேற்ற முடியும். சொத்து வாங்குவதற்கான முயற்சிகள் நல்ல பலன் தரும். மாணவர்கள் படிப்பு மற்றும் விளையாட்டு தொடர்பான விஷயங்களில் சிறப்பாக செயல்படுவார்கள். இன்று தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் இருப்பவர்கள் துணையுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும்.

கடக ராசி பலன்

கடக ராசியினருக்கு முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அவசரப்படுதல் அல்லது உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும். நிதானமான மனநிலையோடு செயல்படவும். இன்று உங்களுக்கு திடீரென சில வருமான வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களின் நிதி நிலையை மேம்படுத்தும். குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று வருவீர்கள். இன்று முடிந்த வரை தேவைப்படும் நபர்களுக்கு உதவி செய்யவும். தான தர்மங்களை ஈடுபடவும். வணிகம் தொடர்பான திட்டங்கள் வேகம் அடையும். உங்களின் கௌரவம் அதிகரிக்க கூடிய நாள். உடல்நல பிரச்சினைகள் மேம்படக்கூடிய நாளாக இருக்கும்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசி சேர்ந்தவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். இன்று நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. அதிக உண்ண வேண்டாம். வணிகம் தொடர்பான விஷயங்களில் லாபகரமான சூழல் நிலவும். இன்று சில பழைய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். அவர்களுடன் ஆக்கப்பூர்வமான விஷயங்களை பேசுவீர்கள். அவர்களிடம் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். இன்று உங்கள் மனைவியின் ஆலோசனை வணிகத்தில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக அமையும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு லாபம் கிடைப்பதற்கான ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும். உங்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். வேலைகளை வேகமாக முடிப்பீர்கள். கோபத்தை கட்டுப்படுத்தி அனைவரும் அனுசரித்து செல்வது நல்லது. இன்று குடும்ப உறுப்பினர்கள் வெற்றி மகிழ்ச்சியை அதிகரிக்கும். தேர்வுக்கு தயாராக கூடிய மாணவர்கள் எதிர்பார்த்த நல்ல சூழல் நிலவும். இன்று உங்கள் தாய் வழி சொந்தங்கள் மூலம் ஆதரவுகள் கிடைக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு பணியிடத்தில் சலுகைகள் மற்றும் புதிய வருமான வாய்ப்புகள் உருவாக்கும். இன்று உங்களின் இனிமையான பேச்சு உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இன்று உங்கள் வேலைகளை முடிக்க அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படும். உங்களின் ஆரோக்கியம் சற்று பாதிக்க வாய்ப்பு உண்டு. வணிகம் தொடர்பாக வெளியூர், வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பும் இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய வியாபாரத்தை புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசிக்கு இன்று எல்லா பிரச்சனைகளையும் சரி செய்ய முடியும். தாய்வழி சொந்தங்கள் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. இதனால் குடும்பத்திலும் பணியிடத்திலும் சூழல் சாதகமாக மாறும். உங்களின் நிதி நிலை எதிர்பார்த்த விதத்தில் முன்னேற்றம் அடையும். அதோடு உங்களின் மரியாதை, புகழ், செல்வ நிலை அதிகரிப்பதற்கான நாள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பணத்தை செலவிட முயற்சி செய்வீர்கள். உங்கள் தொழில் தொடர்பான முன்னேற்றமான சூழல் நிலவும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்கு இன்று வீட்டு உபயோகப் பொருட்கள் அல்லது வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பாக செலவுகள் அதிகரிக்கும். உங்களின் செலவுகள் விஷயத்திலும், பணப்பரிவுரதனை விஷயங்களிலும் கவனம் தேவை. பிறரிடம் உங்களின் பணம் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உண்டு. அரசு தொடர்பான வேலைகள் வேகமாக முடிப்பீர்கள். அரசு வேலையில் உள்ள நேர்மையாக்கும் ஒழுக்கமாகவும் நடந்து கொள்ளவும். இன்று உங்கள் தாயுடன் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

மகர ராசி பலன்

மகர ராசி சேர்ந்தவர்கள் இன்று எந்த வேலையை செய்து முடிக்க நினைத்தாலும் அதில் கடினமான நிலை இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வேலையை சரியான நேரத்தில் முடிக்கும் முயற்சிக்கவும். ஆபத்தான வேலைகள் செய்ய வேண்டாம் ஏனெனில் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று உங்களின் பண நிர்வாகத்தில் கவனம் தேவை. இன்று உங்கள் வாழ்க்கையில், நல்லது தொழில் தொடர்பாக மாற்றத்திற்கான சில திட்டமிடுவீர்கள். இன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு உறவுகள் மூலம் சில தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. முக்கிய வேலைகளை முடிக்க அதிகமாக அலைச்சல் ஏற்படும். இன்று உங்களின் கவலை தீரும். இன்று வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். இன்று எதிலும் பொறுமையாக செயல்படவும். கடினமான சூழ்நிலை விரைவில் சரியாகும். புதிய சொத்து வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் தாய் வீட்டிற்கு செல்ல திட்டமிடுவதற்கு. குழந்தைகளின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும்.

மீன ராசி பலன்

மீன ராசியில் சேர்ந்தவர்களுக்கு திட்டமிட்ட அனைத்து வேலைகளையும் முடிக்க முடியும். வீடு வாங்க நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். மூத்தவர்களின் ஆலோசனைகளைப் பெற மறக்காதீர்கள். திருமணம் தொடர்பான முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சில நாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கி படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். பழைய நண்பர்களுடன் சேர்ந்து பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version