இரத்மலானையில் கால்வாய் ஒன்று சிவப்பு நிறமாக மாறியதற்கான காரணம் தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இரத்மலானை, படோவிட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்று செவ்வாய்க்கிழமை (05) காலை முதல் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.இது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு செவ்வாய்க்கிழமை (05) கிடைத்த தகவலின் பிரகாரம் அன்றைய தினம் (05) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மேல்மாகாண அலுவலகம் கள ஆய்வு மேற்கொண்டுள்ளது.
இந்த கள விசாரணையில், கால்வாயில் சிவப்பு நிற சாயம் கலந்த கழிவு நீர் விடப்பட்டுள்ளதால் தண்ணீர் நிறம் மாறியிருப்பது தெரியவந்துள்ளது.இந்த நிறமி நீரில் கரையக்கூடிய நிறமி என்றும், pH (PH) மதிப்புகள் மற்றும் அளவுருக்கள் தற்போதுள்ள சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப இருப்பதாகவும், அதிக மதிப்புகளைக் காட்டாது என்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.