Home இலங்கை ஏ.ரி.எம் அட்டையை திருடி பணம் பெற்ற சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும்...

ஏ.ரி.எம் அட்டையை திருடி பணம் பெற்ற சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

0
ஏ.ரி.எம் அட்டையை திருடி பணம் பெற்ற சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

களுத்துறை, பண்டாரகமை நகரத்தில் திருடிய ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவரை கைது செய்ய பண்டாரகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். சந்தேக நபர் திருடிய ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி பண்டாரகமை நகரத்தில் உள்ள ஏ.ரி.எம் இயந்திரமொன்றிலிருந்து சுமார் 02 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபரின் புகைப்படம் குறித்த ஏ.ரி.எம் இயந்திரத்திற்கு அருகில் உள்ள சிசிரிவி கமராவின் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.எனவே இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பண்டாரகமை பொலிஸ் நிலையத்தின் 071 – 8591681 அல்லது 071 – 8594267 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version