சீரற்ற வானிலையால் ஒத்திவைக்கப்பட்ட உயர்தர பரீட்சைகள் மீண்டும் நாளை புதன்கிழமை (04) ஆரம்பமாகவுள்ளதென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட மழை, வெள்ள அனர்த்தங்கள் காரணமாக கடந்த நவம்பர் 27ஆம் திகதி முதல் ஒத்திவைக்கப்பட்ட உயர்தர பரீட்சை, நாளை திருத்தப்பட்ட புதிய பரீட்சை அட்டவணையின் பிரகாரம் நடைபெறவுள்ளது. திருத்தப்பட்ட பரீட்சை அட்டவணையை உயர்தர பரீட்சார்த்திகள் அனைவருக்கும் விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் திருத்தப்பட்ட பரீட்சை அட்டவணை வெள்ளைத்தாளில் அன்றி, வேறு நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும்.திருத்தப்பட்ட புதிய பரீட்சை அட்டவணையை பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதேவேளை, பண்டிகைகளை முன்னிட்டு எதிர்வரும் டிசம்பர் 24, 25, 26 ஆகிய திகதிகளில் உயர்தர பரீட்சைகள் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.