Home இலங்கை மழைக்கு மத்தியிலும் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்

மழைக்கு மத்தியிலும் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்

0
மழைக்கு மத்தியிலும் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடைமழைக்கும் மத்தியிலும் இன்றுகாலை மாணவர்கள் ஆர்வத்துடன் கா.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.நாடெங்கிலும் இன்றைய தினம் கா.பொ.த.உயர்தரப்பரீட்சை ஆரம்பமாகின்றது.சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றிவருகின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு,மட்டக்களப்பு,மட்டக்களப்பு மேற்கு,மட்டக்களப்பு மத்தி,கல்குடா ஆகிய கல்வி வலயங்களில் இன்றைய தினம் உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகியது.மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடுமையான மழைபெய்துவரும் நிலையில் பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சைக்கு செல்வதை காணமுடிகின்றது.

இதேபோன்று வெள்ள அனர்த்த உள்ள பகுதிகளில் மாணவர்கள் பரீட்சைகளுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் அனர்த்த முகாமைவத்துவ நிலையம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.அதேபோன்று வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பகுதிகளிலிருந்து பரீட்சையில் பங்கேற்கும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து முன் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இம்முறை இலங்கையில் உயர்தரப் பரீட்சைக்காக 333,185 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version