உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் ஹவேலியா சந்தியில் நேற்று (21) இரவு மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விபத்தில் உயிரிழந்தவர் ஹவேலியா பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார். இந்த விபத்து ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தின்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் இன்று (22) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .