Home உலகம் அளவுக்கு மீறி உணவு உண்டதால் இளம்பெண் நேர்ந்த விபரீதம்

அளவுக்கு மீறி உணவு உண்டதால் இளம்பெண் நேர்ந்த விபரீதம்

0
அளவுக்கு மீறி உணவு உண்டதால் இளம்பெண் நேர்ந்த விபரீதம்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள், அவ்வாறு அளவுக்கு மீறி உணவு உண்டதால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவைச் சேர்ந்த பிரபல யூடியூபரான பென் சியோட்டிங் என்ற 24 வயதுடைய பெண் பல வகையான உணவுகளை சாப்பிடும் சவால்களை செய்து பிரபல்யமானவர்.
இந்தப் பெண் நாள் ஒன்றுக்கு 10 கிலோ வரை உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டவர். இந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர் எச்சரித்தும் அவர் தொடர்ந்தும் அந்த சவாலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த 14ஆம் திகதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
வயிறு சிதைந்து விட்டதாலும், சமிபாடடையாத உணவுகள் இருந்ததாலும் தான் இவரின் மரணத்திற்கு காரணம் என உடலை பரிசோதனை செய்த வைத்தியர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version