கடந்த 6 மாதங்களாக அவன் ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டு இருந்தான். ஜான் ஹென்றி, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரை சந்தித்து தன்னுடைய சந்தோஷத்தை பரிமாறி கொண்டான்.அமெரிக்காவின் ஓகிஹோ மாகாணம் கிளீவ்லேண்ட் நகரை சேர்ந்தவன் ஜான் ஹென்றி. இதய கோளாறுடன் பிறந்த அவனுக்கு 5 மாத குழந்தையாக இருந்தபோது தற்காலிக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதய மாற்று சிகிச்சையே நிரந்தர தீர்வு என டாக்டர்கள் கூறினர். உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து கடந்த 6 மாதங்களாக அவன் ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டு இருந்தான். இன்றோ, நாளையோ என இதய தானத்திற்காக ஜான் ஹென்றி காத்திருந்தநிலையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் ஜான் ஹென்றிக்கு பொருத்துவதற்கான தகுந்த இதயம் கிடைத்தது. இந்த தகவல், அவனுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் உற்சாகத்தை அளித்தது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு ஜான் ஹென்றி, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரை சந்தித்து தன்னுடைய சந்தோஷத்தை பரிமாறி கொண்டான்.
மருத்துவ உபகரணத்துடன் ‘நான் புதிய இதயத்தை பெறுகிறேன்’ என கூறியப்படி அவன் தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினான். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை நெகிழ வைத்துள்ளது.