Home உலகம் குட்டித் தூக்கம் போட்ட ஊழியர் பணிநீக்கம் செய்த நிறுவனம்- ரூ. 42 லட்சம் அபராதம்

குட்டித் தூக்கம் போட்ட ஊழியர் பணிநீக்கம் செய்த நிறுவனம்- ரூ. 42 லட்சம் அபராதம்

0
குட்டித் தூக்கம் போட்ட ஊழியர் பணிநீக்கம் செய்த நிறுவனம்- ரூ. 42 லட்சம் அபராதம்

சீனா நாட்டின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள டாய்க்சிங் [Taixing] நகரில் இயங்கி வரும் கெமிக்கல் நிறுவனத்தில் ஜாங் [Zhang] என்ற நபர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்துள்ளார். நள்ளிரவுவரை வேலை இருந்ததால் அவர் ஆபீசில் தனது மேஜையிலேயே ஒரு மணி நேரம் வரை குட்டித் தூக்கம் போட்டுள்ளார். இதனை சிசிடிவி கேமராவில் பார்த்த மேலதிகாரிகள் அவரை வேலையை விட்டு தூக்கியுள்ளனர். வேலையின்போது தூங்கி கம்பெனியில் நெறிமுறைகளை அவர் மீறியதாக HR டிபார்ட்மென்ட் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் அவருக்கு அனுப்பிய நோட்டீஸில், ஜாங், நீங்கள் 2004 இல் ஓபன் கான்டிராக்ட்டில் கையெழுத்துப்போட்டு நிறுவனத்தில் சேர்ந்தீர்கள்.வேலையில் தூங்கும் உங்கள் நடத்தை நிறுவனத்தின் கொள்கை மீறலாகும். இதன் விளைவாக, தொழிற்சங்கத்தின் ஒப்புதலுடன், நிறுவனம் உங்களை வேலையை விட்டு நிறுத்த முடிவு செய்துள்ளது கூறப்பட்டிருந்ததது.ஆனால் தன்னை பணியிலிருந்து நீக்கியது நியாயமற்ற செயல் என கூறி அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூ குய், ஜாங் வேலையிடத்தில் தூங்கியது நிறுவனத்திற்கு எந்த தீங்கு விளைவிக்கவில்லை, ஜாங்கின் அந்த நிறுவனத்துக்கு 20 வருடங்களாக உழைத்துள்ளார்.அவருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்க விரும்பாததால் அவரை நிறுவனம் பணிநீக்கம் செய்ததாகத் தெரிகிறது. எனவே இது நியமற்றது என கூறிய நீதிபதி, ஜாங்கிற்கு 350,000 யுவான் [ரூ. 41.6 லட்சம்] இழப்பீடு வழங்குமாறு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தார்.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version