Home உலகம் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் தொடர்ந்தும் சிக்கல்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் தொடர்ந்தும் சிக்கல்

0
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் தொடர்ந்தும் சிக்கல்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மூன்றாவது முறையாகப் பயணம் மேற்கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நாசாவின் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ரொக்கெட் மூலம் இந்திய வம்சாவளியான 58 வயதுடைய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 61 வயதுடைய மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மே 05ஆம் திகதி விண்வெளிக்குப் பயணத்தை மேற்கொண்டனர்.

குறித்த இருவரும் திட்டமிட்டபடி கடந்த மே 22ஆம் திகதி பூமிக்குத் திரும்பியிருக்க வேண்டும்.
ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்கள் பூமிக்குத் திரும்புவது ஒத்திவைக்கப்பட்டது.தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்புவதில் தொடர்ந்தும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட வாயுக்கசிவு மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அவர்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவது இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. குறித்த இருவரும் விண்வெளி ஆய்வு மையத்திலேயே தங்கியுள்ள நிலையில் அவர்கள் பூமிக்குத் திரும்பும் திகதி இதுவரையில் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகளைச் சரிசெய்வதற்கான வேலைத்திட்டங்களை நாசா முன்னெடுத்திருந்தது.கடந்த 18ஆம் திகதி Crew 9 என்ற திட்டத்தின் கீழ், இலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் கொண்ட குழுவை நாசா அனுப்பி இருந்ததது.இந்த நிலையில், விண்வெளியில் சிக்கிக் கொண்ட வீரர்கள் பூமிக்குத் திரும்புவதில் உள்ள 3 சிக்கல்கள் குறித்து அமெரிக்க இராணுவ விண்வெளி அமைப்புகளின் முன்னாள் தளபதி ரூடி ரிடோல்ஃபி கருத்து வெளியிட்டுள்ளார். பூமிக்கு விண்கலம் பாதுகாப்பாக இறங்குவதை உறுதி செய்ய ஸ்டார்லைனர் சரியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் பல ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அத்துடன், விண்கலம் செங்குத்தான கோணத்தில் வளிமண்டலத்தில் நுழைந்தால் தரைப்பகுதியை அடைவதற்கு முன்பே தீப்பற்றி எரிந்து வீரர்கள் உயிரிழக்க நேரிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version