Home உலகம் நான் அதிபரானால் பெண்களுக்கு இலவச செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை

நான் அதிபரானால் பெண்களுக்கு இலவச செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை

0
நான் அதிபரானால் பெண்களுக்கு இலவச செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை

அமெரிக்கா அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் பெண்களுக்கு இலவச செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை அளிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகின்றனர்.தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பதால் அதிரடியாக பல வாக்குறுதிகள் இருவரும் மாறி மாறி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று குடியரசு கட்சியின் பேரணியில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப் அமெரிக்காவுக்கு அதிக குழந்தைகள் வேண்டும் என்பதால் நான் அதிபர் ஆனால் பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை இலவசமாக அளிப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். இந்த திட்டத்திற்கு தேவையான நிதி உதவியை அரசு அல்லது மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் என்றும் அவர் கூறினார்.செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு இலட்சக்கணக்கில் செலவாகும் என்ற நிலையில் இந்த வாக்குறுதியை அடுத்து பெண்கள் ஓட்டு அவருக்கு அதிகமாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version