இந்தோனேசியாவிலுள்ள வாலி என்ற ஆற்றில் பாத்திரங்கள் கழுவிய பெண்ணை முதலையொன்று நீருக்குள் இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வாலி ஆற்றில் மீது அமைந்துள்ள பாலத்தில் மகிழுந்து ஓட்டிச்சென்றுகொண்டிருந்த அலி (Ali ) என்ற நபர், ஆற்றில் ஒரு பெண்ணின் கால்கள் தெரிவதை அவதானித்துள்ளார்.
எனினும் யாரோ ஒருவர் ஆற்றில் நீந்துவதாக நினைத்துள்ளார்.ஒரு பெண் தண்ணீருக்குள் போராடுவது போலத் தெரியவே, அவருக்குச் சந்தேகம் ஏற்பட்ட மகிழுந்திலிருந்து இறங்கி அருகில் சென்றுள்ளார்.
அதன்போது ஒரு முதலை பெண்ணொருவரை தண்ணீருக்குள் இழுத்துச் செல்வதை அவதானித்துள்ளார்.உடனடியாக காவல்துறைக்குத் தகவல் வழங்கியதுடன், குறித்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த முதலையைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.இதனையடுத்து அந்த முதலையின் உடலை வெட்டிப் பார்க்கும்போது, ஒரு மனித உடலை முதலை விழுங்கியிருந்தமை தெரியவந்தது.எனினும் முதலை விழுங்கியதில் குறித்த பெண் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பெண் பாத்திரங்களைக் கழுவுவதற்காக ஆற்றில் இறங்கியபோது, 14 அடி நீளம் கொண்ட இராட்சத முதலையொன்று அந்தப் பெண்ணை தாக்கியதுடன் நீருக்குள்ள இழுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.இதேவேளை இந்தோனேசியாவில் அமைந்துள்ள குறித்த ஆற்றில் முதலைகளால் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.