Home உலகம் ஸ்பெயினில் களைகட்டிய தக்காளி திருவிழா

ஸ்பெயினில் களைகட்டிய தக்காளி திருவிழா

0
ஸ்பெயினில் களைகட்டிய தக்காளி திருவிழா

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் தக்காளி திருவிழா நடத்தப்படும் வழக்கம் பல தசாப்தங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதன்படி, இந்த ஆண்டு ஸ்பெயினின் கிழக்கே, வாலன்சியா நகருக்கு மேற்கே 40 கிலோ மீற்றர் தொலைவில் புனோல் நகரில் இந்த பாரம்பரிய திருவிழா புதன்கிழமை (28) நடைப்பெற்றுள்ளது.இதில், வெள்ளை நிற உடையில் ஆண்கள், பெண்கள் என 22 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டனர். இந்த திருவிழாவுக்காக நன்றாக விளைந்த, சிவப்பு நிறத்திலான 1,50,000 கிலோ (150 தொன்) கணக்கிலான தக்காளிகள் 7 லொறிகளில் கொண்டு வந்து தயாராக வைக்கப்பட்டு இருந்தன.

வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களுக்கு தலா ஒருவருக்கு 16.70 டொலர் என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. பட்டாசு வெடிப்புகளுடன் திருவிழா களைகட்ட தொடங்கியது. இந்த திருவிழாவில், தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர்.இந்த தக்காளிகள் அதிக அமிலத்தன்மையுடன் புளிப்பு சுவை நிறைந்தவை. மனிதர்கள் உண்பதற்கு ஏற்றது அல்ல. இதற்காகவே, இந்த தக்காளிகள் தனிப்பட்ட முறையில் விளைவிக்கப்படுகின்றன என கூறப்படுகிறது. இதன்பின்பு, தெருக்களில் உள்ள தக்காளி கழிவுகளை, அதற்காக பணியமர்த்தப்பட்ட குழுவினர் நீரை பாய்ச்சியடித்து, சுத்தம் செய்தனர்.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version